- Advertisement -

அஜித் பட வாய்ப்பு.. தலைகால் புரியாமல் பிரபலம்

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டது. இதனால் அஜித் மற்றும் உதயநிதி இடையே ஒரு சமூக உறவு இருந்து வருகிறது.

- Advertisement -

இப்போது உதயநிதியின் வலது கையான இயக்குனருக்கு அஜித் படவாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகையால் தற்போது இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரில் ஒருவர் ஏகே 62 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இப்போது விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இல்லை என்றும் மகிழ்திருமேனிக்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸின் முக்கிய பொறுப்பாளர் சண்முக மூர்த்தி தான் என கூறப்படுகிறது. சண்முக மூர்த்தியின் நெருங்கிய நண்பர் தான் மகிழ் திருமேனி. ஆகையால் லைக்காவிடம் மகிழ்திருமேனியை சண்முக மூர்த்தி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும் இயக்குனர் சொன்ன கதை லைக்கா மற்றும் அஜித்துக்கு பிடித்துள்ளதால் உடனே படம் பண்ணலாம் என்று ஓகே சொல்லி விட்டார்களாம்.

- Advertisement -

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -