Connect with us

தமிழ் சினிமா

ஒரே மாதத்தில் ஒரே நாளில் மீண்டும் வெளியாகவுள்ள அஜித்-விஜய் படம்

 அஜித்-விஜய் படம்

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது.

இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற’ துணிவு’ மற்றும் ’வாரிசு’ திரைப்படங்கள் அடுத்தகட்டமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் அதே தேதியில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஓடிடியிலும் ஒரே நாளில் வெளியாக இருப்பது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top