இந்தி படத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோதிகா

1 Min Read

சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் ‘சைத்தான்’ படத்தில் அஜய் தேவ்கன் கதாநயகனாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

Share This Article
Follow:
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
Leave a comment