அந்த மாதிரி பேரு வர இதுதான் காரணம்… குமுறிய பிரபல நடிகை!

நடிகை கிரணை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தனது 18 வயதில் ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண்.

சேட்டு வீட்டு பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண் அடுத்தடுத்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் என தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

ஆரம்பமே டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்த கிரண் திடீரென நடிகர் விஜய்யின் திருமலை படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

அந்த மாதிரி பேரு வர இதுதான் காரணம்... குமுறிய பிரபல நடிகை!

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அதுகுறித்து பேசிய கிரண் அந்த ஐட்டம் பாடலுக்கு நடனமாட வின்னர் படம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

அதாவது வின்னர் படத்தில் கிரண் கிளாமராக நடித்திருப்பார். எனவே அதில் இருந்து மக்கள் அவரிடம் கவர்ச்சியை தான் எதிர்பார்த்தார்களாம்.

- Advertisement -

மேலும் ஒருமுறை கவர்ச்சி காட்டி நடித்தால் தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகள் தான் வரும். எனவே தான் அந்த பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த பாடலில் கிரண் தொப்புள் தெரியுமாறு உடையணிந்து நடனமாடி இருப்பார்.

முதலில் அந்த உடையை அணிய மாட்டேன் என்று கிரண் கூறினாராம். ஆனால் வேறு வழியின்றி அந்த உடையை அணிந்து நடனமாடினாராம். அந்த பாடலில் இருந்து என்னை பலரும் தொப்புள் ராணி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் என கிரண் கூறியுள்ளார்.