- Advertisement -

மன அழுத்தத்தில்.. திருமணம் ஆகாமலே முன்பே குழந்தை பெற்ற நடிகை…

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தார் இலியானா.

ஒருகட்டத்திற்கு மேல் பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கேயே செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்த இலியானா அதன் பின்னரே தனது கணவரை அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -

சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இலியானா சோசியல் மீடியாவிலும் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலியானா சோசியல் மீடியாவில் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதன்படி அவர், “நான் முழு நேரமும் என்னுடைய குழந்தையை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன். இருப்பினும் பல நாட்கள் தூங்காமலும் இருக்கிறேன். உண்மையாகவே தாய்மை மிகவும் கடினமாக உள்ளது. இதை நான் குறையாக சொல்லவில்லை.

- Advertisement -

என் குழந்தை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. ஆனால் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மன அழுத்தம் மிகப்பெரிய விஷயம். அது குறித்து நாம் மீண்டும் பேசலாம். நிச்சயம் இப்போது இருக்கும் வாழ்க்கை குறித்து நான் உங்களுடன் நிறைய பேசுவேன்.

விரைவில் திரும்பி வருவேன். சில அம்மாக்களைப் போல உடனே என்னால் வர முடியவில்லை. ஆனால், பொறுமையாக நலமுடன் திரும்பி வருவேன்” என்று குழந்தையை கவனிக்கும் ஒரு பொறுப்பான தாயாக சில விஷயங்களை கூறியுள்ளார்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -