அஜீத் தந்தை மறைவு ..நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித் – விஜய். இவர்களின் ரசிகர்கள் அறிமுகமான காலத்திலிருந்தே இரு துருவங்களாக மோதிக் கொண்டு இருக்கின்றனர்.

இருந்தாலும் இருவரும் நட்பு ரீதியாக ஒருவருக்கொருவர் எந்த மேடையிலும் விட்டு கொடுத்ததில்லை. எப்படி ரஜினி – கமல் இருந்தார்களோ அதே மாதிரி இன்றைய தலைமுறையினருக்கு அஜித் விஜய் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படமும் நேரடியாக பொங்கல் வெளியீடாக மோதியது.

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீர் பிரிவு படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை வந்தடைந்துள்ளனர்.

அஜித் தனது 62வது படமான ‘AK62’ திரைப்படத்தின் வேலையில் இறங்கியுள்ளார். இப்படத்தை மகிழ் திருமேணி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

அஜித் குமார் தந்தை சுப்பிரமணியம் வயது மூப்பின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென சுப்பிரமணி உறங்கும்போதே இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த சுப்பிரமணி அவரது உடல் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகர் அஜித் மீது அன்பு கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அஜித் அவரது தந்தை மறைவையொட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here