Homeதமிழ் சினிமாமாவீரன் படத்தை நினைவுபடுத்துகிறதா அயலான்? படம் எப்படி இருக்கு தெரியுமா?

மாவீரன் படத்தை நினைவுபடுத்துகிறதா அயலான்? படம் எப்படி இருக்கு தெரியுமா?

இன்று நேற்று நாளை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக நுழைந்தவர் இயக்குனர் ரவிக்குமார்.

தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இப்படம் வெளிவராமல் இருந்த நிலையில் பல போராட்டங்களை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஏலியானை வைத்து உருவாகி உள்ள அயலான் படம் குழந்தைகளுக்கான படம் என்று தான் பலரும் நினைத்து வந்தனர்.

ஆனால் அயலான் அனைவருக்குமான ஒரு பாடமாக உள்ளது. பொதுவாக ஏலியன் என்றாலே பூமியை அழிக்கும் நோக்கில் தான் வரும்.

மாவீரன் படத்தை நினைவுபடுத்துகிறதா அயலான்?

ஆனால் அயலான் படத்தில் பூமியை காப்பாற்றும் விதமாக ஏலியனை சித்தரித்திருப்பது சிறப்பு. அதேபோல இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்பதுபோன்ற சில அழுத்தமான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.

வேற்று கிரகத்தில் இருந்து பூமியித் சிதறிய சக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழிலதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்து உலகின் சக்கி வாய்ந்த எரிபொருளாக மாற்ற முயற்சி செய்கிறான்.

அதனை தேடி ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. அதை ஏலியன் கண்டுபிடித்ததா? சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்தார் என்பது தான் கதை.

இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான நிலையில் படம் நிச்சயம் அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஆங்காங்கே சில இடங்களில் மாவீரன் படத்தை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

என்ன ஒரு வித்தியாசம் அதில் குரல் மட்டும் கேட்கும். இதில் ஏலியன் உள்ளது அவ்வளவு தான். மற்றபடி அயலான் பார்க்கக்கூடிய ஒரு படமாகவே உள்ளது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை