- Advertisement -

மனோபாலா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான 69 வயதாகும் மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Also Read – மறைந்தார் மனோபாலா… அதிர்ச்சியில் ரசிகர்கள்

- Advertisement -

இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்தார் மனோபாலா... அதிர்ச்சியில் ரசிகர்கள்

- Advertisement -

இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -