படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விக்ரம் விலா எலும்பு முறிவு

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தங்கலான் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read – ரசிகரை கோபத்தில் தட்டி விட்ட நடிகர் ஷாருக் கான்!

- Advertisement -

இந்த நிலையில், சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

- Advertisement -

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.