- Advertisement -

விஷால் பட நடிகையை காணவில்லை.. ஏற்பட்ட பரபரப்பு

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

விஷால் உடன் இணைந்து லத்தி படத்தில் நடித்திருந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு தன் தோழியுடன் வந்திருக்கிறார்.

சுனைனா

- Advertisement -

ஆனால் அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது. சுனைனா கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் ரெஜினா பட தயாரிப்பு தரப்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை மிக வேகமாக சோசியல் மீடியாவில் வைரல் செய்து வந்தனர். அது மட்டுமின்றி சுனைனாவுக்கு என்ன ஆனது என்ற கேள்விகளும் எழ தொடங்கியது.

- Advertisement -

ஆனால் இறுதியில் இது பட ப்ரொமோஷனுக்காக என்ற விஷயம் தெரிய வந்ததால் போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்புக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -