Connect with us

மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் ரீஎண்ட்ரி

Movies

மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் ரீஎண்ட்ரி

கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களில் நடித்த மக்கள் நாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகிறார்.

கடந்த 1986ஆம் ஆண்டு ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக ராமராஜன் அறிமுகமானார்.

அதன்பின் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். குறிப்பாக ’கரகாட்டகாரன்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.

இந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 2012ஆம் ஆண்டு ’மேதை’ என்ற படத்தில் மட்டும் நடித்தார்.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் மக்கள் நாயகன் ராமராஜன் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.

அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top