24 C
Colombo
Friday, November 18, 2022 : 9:01 am

#Trending

மிரட்டும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்!

பிரபாஸ் நடித்து வரும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழ் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஓம் ரெளட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் அனைத்து மொழி டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வ நாசம் செய்ய’ என்ற பிரபாஸின் ஆக்ரோஷமான வசனத்துடன் உள்ள இந்த டீஸரில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது.

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

HTML tutorial

#Celebrities