ஐபிஎல் ஆரம்பிக்க முன்னதாக கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்… வெளியான தகவல்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. பிசிசிஐ-யின் அறிவிப்பில் காயம் காரணமாக கேஎல் ராகுல் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளதாகவும், மேலும் அவரது காயம் குறித்து பிசிசிஐ மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் மேற்கொண்டு சிகிச்சைகளுக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்றைய தினம் கேஎல் ராகுல் இந்தியா வந்துள்ளதாகவும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட அகாடமியில் தனது உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் கேஎல் ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் முழுநேரமாக அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.