- Advertisement -

இப்படி ஜெயிக்கணும்.. அஸ்வின் கலக்கல்… பேஸ்பால் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வெச்ச ரோஹித் சர்மா..

Cinema Editor
By Cinema Editor
2 Min Read
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வந்து டெஸ்ட் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் நான்கு போட்டியிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது.

இந்திய அணியில் அதிக இளம் வீரர்களும், அதே வேளையில் மறுபக்கம் இங்கிலாந்தில் அதிக அனுபவமிக்க வீரர்களும் இருந்த நிலையில் இதில் இந்திய அணியில் இருந்த இள வீரர்கள் துடிப்பாக தொடர் முழுக்க செயல்பட்டு வெற்றிகளையும் தங்கள் பக்கம் குவித்து இருந்தனர்.

- Advertisement -

ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப், துருவ் ஜுரேல், தேவ்தத் படிக்கல் என பல இளம் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில், அவர்கள் அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெறவும் உதவி இருந்தார்கள்.

இவர்களுக்கெல்லாம் முதுகெலும்பாக இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆதரவு கொடுத்து அவர்களை தேற்றி எடுத்து நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவி இருந்தார்.

- Advertisement -

இதனால் பென் ஸ்டோக்ஸ்,ஜோ ரூட், பேர்ஸ்டோ என அசாத்தியமான பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியை கூட எளிதில் இந்திய அணியால் வீழ்த்தி தொடரையும் 4 – 1 என்ற கணக்கில் முடிக்க உதவி செய்திருந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களும், இந்திய அணி 477 ரன்களும் எடுத்திருந்தது.

- Advertisement -

தொடர்ந்து 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தங்களின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்தது. முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் இந்த முறை இங்கிலாந்தின் தொடக்க வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து சாய்த்திருந்தார். சாக் கிரவுலி,பென் டக்கட், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் என மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அஸ்வின் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி பின்தங்கிய ரன்னைக் கூட எட்ட முடியாததன் காரணமாக, இன்னிங்ஸ் மற்றும் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மூன்றாவது நாளிலேயே போட்டியை இந்திய அணி முடித்து அசத்தியுள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக அபாரமாக செயல்பட்டிருந்தனர். மேலும் இந்த தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தை மிக பலமாக பிடித்துள்ளது என்று சொல்லலாம்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -