- Advertisement -

இங்கிலாந்து வீரரால் தோனிக்கு வந்த சோதனை…. இந்த தடவ சிஎஸ்கே பிளே ஆஃப் போகாது?

Cinema Editor
By Cinema Editor
2 Min Read
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பலரின் பார்வையும் சிஎஸ்கேவின் பக்கம் தான் உள்ளது. ஐபிஎல் தொடர் வந்து விட்டாலே மாஸ் காட்டும் அணியாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே தோனி மற்றும் இளைஞர்கள் பலரும் பயிற்சியை ஆரம்பித்து விட்டனர்.

தொடர்ந்து சிஎஸ்கே அணியும் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பயிற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதனால் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை கைப்பற்றியுள்ளதால் இந்த முறை இரு அணிகளில் ஒன்று கோப்பையை கைப்பற்றி அதிக முறை கோப்பையையை வென்ற அணி என்ற பெருமையை சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்யும் என்றும் தெரிகிறது. இப்படி பல விஷயங்கள் இந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே, சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என சில கணக்குகளை போட்டு ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், அந்த தொடரிலிருந்து விலகி இருந்தார். அந்த ஆண்டு தான் முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறவில்லை. அதே ஆண்டு ஜேசன் ராய் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால் விலகி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் விலகிய ஆண்டில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. அப்படி இருக்கையில் இந்த முறையும் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளதால் சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு முன்னேறாதா என குழப்புத்துடனும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே நிலையில் இதில் மற்றொரு அசத்தலான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் ஜேசன் ராய் 2020 ஆம் ஆண்டு விலகிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 2022 ஆம் ஆண்டு விலகிய குஜராத் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது. அப்படி இருக்கையில் இந்த முறை கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் இடம்பெற்று விலகியதால் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -