Connect with us

இதயம் முரளியின் 59வது பிறந்தநாள் இன்று! சிறப்பு தொகுப்பு!

திரை வரலாறு

இதயம் முரளியின் 59வது பிறந்தநாள் இன்று! சிறப்பு தொகுப்பு!

கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான முரளி, தமிழ் சினிமாவுக்கு பூ விலங்கு படத்தின் மூலம் என்ட்ரி ஆனார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1964-ஆம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்த முரளி, 1984-ஆம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரை உலகில் நுழைந்து தமிழில் ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ வின் நாயகனானார்.

இதயம் முரளியின் 59வது பிறந்தநாள்

1990-ல் இயக்குனர் விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புதுவசந்தம்’ முரளிக்கு புது அடையாளத்தை பெற்று தந்தது. முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘இதயம்’.

காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார் முரளி.

பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘கடல் பூக்கள்’ படத்துக்காக 2000-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை பெற்றார்.

இதயம் முரளியின் 59வது பிறந்தநாள்

சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

‘ஆனந்தம்’ , ‘சமுத்திரம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘பொற்காலம்’, ‘கனவே கலையாதே’ போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் ஆனார் முரளி.

‘சுந்தரா டிராவல்ஸ்’ மூலம் வடிவேலுவுடன் இணைந்து காமடியிலும் ரசிக்க வைத்தார். இவர் கடைசியாக நடித்த படம் ‘பாணா காத்தாடி’.

தனது இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த முரளி செப்டம்பர் 8, 2010 அன்று 46வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

மறைந்த நடிகர் முரளியின் 59வது பிறந்தநாள் (மே 19) இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in திரை வரலாறு

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top