CINEMA NEWS | சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு வாரிசு படக்குழுவின் கிறிஸ்துமஸ் ட்ரீட்
வாரிசு அப்டேட்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1605534456860778496
இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
